காதல் தேவதையே

காத்தோடு காத்தாக
உனை தேடுறேன்...
இராத்திரியில் உனை-தானே
நெனைச்சி பாடுறேன்...

உன்னோடு உன்னோடு-பெண்ணே 
உயிர் கொண்டேன்
உயிரோடு உயிரோடு-நான்
உயிர்குலைந்து போறேன்...

நினைவோடு நினைவாக
நீந்திப் போகிறேன்...
நினைவிலே நீ வந்தால் 
நிம்மதி இலக்கிறேன்...

விழிகள் யெல்லாம்
வலியாலே வாடுதே
வழிகள் இருந்தும்-உன் 
விழிகளை காணலையே...

சின்னச் சின்ன
ஆசைகளில் நீ தானோ
என்னை சிலிர்க்க
வைத்தவள் நீ தானோ...

இதயச் சுவரிலே
உன் பிம்மம்
சிதைந்து போகுதே
என் இன்பம்...

அந்தி சாயும்
நேரத்தில் தான் -நான்
அமராவதி கரையோரம்
உனக்காக காத்திருக்கேன்...

காணாமல் போன -எந்தன்
காதல் தேவதையே
இமைக்குள் நீயும்
கொஞ்சம் வாயேண்டி...

நான் இன்றாவது 
தஞ்சம் கொள்கிறேன்...

                 ✍️விசித்திரக்கவி 
















Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்