பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...
பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்... அரங்கமே அமைதியில் அழுகையில் பிஞ்சு ரோஜாக்கள்... அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்... உங்களின் வன்புணர்வு விரல்களுக்கு இடையில் சிக்கி க் கொண்ட மலராத மொட்டு ரோஜாக்கள் அவை... பாலை வானத்தில் பூத்த ரோஜாக்கள்... உங்களின் பாழாய் -போன பாலியல் வன்கொடுமையில் பறிக்க பட்ட பாவப்பட்ட பூக்கள்... புத்தகமும் புதிய கனவுகளும் புத்தியில் சுமக்கும் வயதில், மனதோடு மக்காத அந்த கொடூர நினைவுகளை பரிசளித்த அறிவுள்ள பைத்தியவாதிகளே... அப்படியே விட்டு விடுங்கள்... உங்களின் பசி தீர்க்க அந்த பூக்களை புசிக்காதீர்கள்... பூமியில் பூக்காத இன்னும் எத்தனையோ ரோஜாக்கள், நினைத்தாலே... அவற்றின் வண்ணத்திலேயே வருகிற...