என்னாசைக்கு வேலிஉன் புருவத்தின் பார்வையடி ...
விண்ணோடும் மண்ணோடும்
உந்தன் விழியோடும் ம்ம்ம்...
எத்தனைக் கோடி
விளங்காத மர்மங்களடி...
மல்லிகை தேசத்து
பெண் நிலவே
மயக்கத்தினைக் கூட்டியப்பின்
தயக்கம் ஏனடி...!
ஆசை மயிலே
அழகிய எழிலே
உன் மச்சம் கிள்ளி
என் மனசெல்லாம் பூக்குதடி...!
புது வெள்ளி
பொன் ரதமே
வளை கொஞ்சும்
குவளைச் சரமே...
மின்மினி கண்களால்
மின்னல் அடித்து,
அனல்மேல் தள்ளி
சாரலாய் பொழிகிறாய்...
போதும் போதுமடி
இனியும் தாங்காது
வண்ணத்து பூச்சிக்கு
வானம் நீயடி..
என்னாசைக்கு வேலி
உன் புருவத்தின் பார்வையடி ...
விண்ணோடும் மண்ணோடும்
உந்தன் விழியோடும் ம்ம்ம்...
எத்தனைக் கோடி
விளங்காத மர்மங்களடி...
-விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...