மல்லிகை நானும் சென்றுவந்தேன்
அந்தியில் சந்திக்க -எந்தன்
ஆவி துடிக்கிறதே
மொட்டவிழ்ந்த மலரை -நாட
எந்தன் கை தவிக்கிறதே...
வட்டநிலா வந்ததும் -எனை
தேடி வந்திடுவாள்
சுட்டநிலாவை கண்டாள் -தனை
சுடர் விட்டெரிவாள்...
பட்டுடல் தீண்டிட -என்
பக்கத்தில் வருவாள்
புத்தம்புதிய கற்பனைகள்
பல தருவாள்...
கொள்ளை அழகில் -கன்னி
தினம் பூத்திருப்பாள்
பூத்தவளோ பூக்காதென்னை
பூப்பறிக்க காத்திருப்பாள்...
கொண்டவன் காண
மல்லிகை யெனை
முல்லை அவள்
கொண்டையில் சொருகிடுவாள்...
கண்ட அவனோ
கட்டுக் குலைந்திடவே
முல்லை இதழை
அள்ளிப் பருகிடுவான்...
தொட்ட இடமெல்லாம்
மின்னல் மின்னி
ஒளி மறைந்திட
நள்ளிரவில் களைத்திருப்பாள்...
பூவையாளோடு பூனானும்
பூலோகம் விட்டு
புண்ணிய லோகம்
சென்று வந்தேன்...

Sema
ReplyDelete