தாவணிச் சிலையே
ஆத்தாடி...
மேனி நிறைய
ஊர்வலமா வந்து
உதட்டு ரேகையில
ஊடுருவி கொஞ்சம்
தஞ்சம் கொள்ளவா...
மாங்கனி நெஞ்சத்தில்
மையல் கொண்டு
மஞ்சள் நிலவோடு
மஞ்சம் கொள்ளவா...
மல்லிகை பூவுக்கு
என்னடி மந்திரம் சொன்ன...
மான்விlழி பார்வையில்
மச்சானை மயக்குதடி...
அல்லி தண்டு
இடையில் நான்
துள்ளி விளையாட...
துளித் துளியாய்
நீ நெளிந்து
என் ஆசைகளை
அலந்து சொல்ல...
அந்த இரவு
எந்த இரவு...
அது இந்த
இரவானால் அடடா...
போதும் போதும்
சொல்லாமலே சுகம் -தான்
சொக்கிப் போகுதடி...

Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...