இறைவா நீ வா...

இறைவா நீ 
இருக்கிறாயா...? 

நீயே தான் 
இறைவா இருக்கிறாயா...? 

அங்கே என்ன 
தேடுகிறாய்... 

இன்னும் ஏதேனும் 
புதிய சோதனை இருக்கிறதா...? 

அந்த சோதனையில் 
தரத்தில் இன்னும் பாவமா 
போதும் போதும்... 

இதோ  பார் 
குப்பை தொட்டியில் 
குழந்தையின் குரல்
கேட்கிறதா உனக்கு...

கண்கள்  இருக்கிறதா உனக்கு... 
அப்படியே இருந்தும் 
கருவறைக் குள்ளே 
கற்புகள் சூறையாடப்படுவதை 
கண் கொட்டாமல்  ரசிக்கிறாயோ... 

ஊருக்கே  உதவியவன் 
ஊருக்குள் ஆண்டியாக ஆகலாமா... 
கொடுத்து சிவந்த கரங்கள் 
சீல் வடியலாமா... 

பள்ளி அறையில் 
பிஞ்சுகளை மஞ்சமிட வைத்து 
மதயானை போல் 
மண்மேலே திரிவது நியாயமா...

உழவனே ஒருபிடி 
சோத்துக்கு சகலமா... 
செத்து செத்து 
அவன் சரிந்து போகலாமா... 

தவறு செய்தவன் 
தப்பிக்கிறான் அதை 
தட்டி கேட்டவன் 
தரமாக தண்டிக்கப்படுகிறான்... 

நாக் கெல்லாம் 
கொடும் நாகங்களாக மாறி 
நெஞ்சத்தில் நஞ்சினை 
கக்கிகக்கி நொந்ததை 
காணலையோ நீ... 

ஈர மண்ணிலே 
இன்னும் ஏனடா 
இடி மேல் இடி 
விழ காரணம்... 

பத்தினியோ பைத்தியம் போல் 
பத்திய மிருந்தும் 
பாழாய் போன 
உலகம் வேசி
பட்டம் கட்டுவதோ... 

உனை அழைத்து 
அழைத்து அழுதது போதும்... 
உன் தொழில் மறந்து 
கல்லாய் போனாயோ... 

நீ வராது போனால் 
காலனை அழைப்பேன் ... 
அவன் காட்டும் 
கருணையில் சில  
நல்ல உள்ளங்கள் 
நிம்மதியாக உறங்கட்டும் 

நிம்மதி நிம்மதி 
என்பதெல்லாம் சமாதியில் தானோ... 


                  ✍️விசித்திரக்கவி 







 

Comments

  1. இவ்வளவு
    சோதனைகளையும்
    மனிதன் சகித்துக் கொண்டு தாங்கிக் கொள்வதால் தான்.
    இன்னும் இன்னும் ௮திக துன்பங்கள் நம்மை தாக்குகிறது.

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்