பால் நிலவு
செக்கசிவந்த செவ்வானமும்
சிவந்து போகும்
செவ்விதழ் கொண்டவளே
வட்ட பொட்டழகி...
வஞ்சமில்ல வஞ்சிக்
கொடிஇடை அழகியோ
கண்டாலே போதையேற்றும்
கஞ்சாக் கண்ணழகி...
கருமேக காட்டாறு
கூந்தலுக்கு சொந்தக்காரி
அவள் செங்கரும்பு உதட்டுக்கு -நான்
சிட்டெறுப்பு காவக்காரன்...
பூ மேனியிலே
பொன்கருப்பு சாறெடுக்க
பால் நிலவில்
பாய் போடலாம் வா...

Sema
ReplyDeleteஅழகு டா
ReplyDelete