இவள் இனி கண்ணீருக்கே தத்துப்பிள்ளை...



கண்களால்  காதல் 

சொல்லி  காதுகள் 

இனிக்க  இனிக்க 

கதை  பேசியவளோ... 


கணவனாகும்  முன்னே 

கார்கால  மேகம் 

போல்  கண்ணீர் 

சிந்தி  போகுதம்மா.. 


கனவுகளை  கொடுத்து 

கண்களை  களவாடியவளோ... 

கருங்கூ ந்தலில்  பூச்சூடி 

கண்டாங்கி  சீலைகட்டி... 


கண்கவரும்   ஓவியமொன்னு 

கலைந்து  போகுதம்மா... 

வரம்   கொடுத்தச் 

சாமி   ஒன்னு... 


எனக்கு  வரம்  கொடுத்தச் 

சாமி  ஒன்னு 

எந்தன்  வாசற்படி 

வாரமா  தான்  போகுதம்மா... 


எந்தன்  காதல்செடி 

பூபூக்கும்  முன்னே 

மாற்றான்  வீட்டு 

மல்லிகையா  மணந்து 

மனசு  நொந்து  போகுதம்மா... 


சாதி  சனமெல்லாம் 

ஒன்னு   சேந்து 

ஒன்னான  மனச 

ரெண்டாக்கி  அதுல 

ஒன்ன  புதைச்சு 

புது  வீட்டுக்கு 

கூட்டி  போகுதம்மா... 


கை  புடுச்சவனோ 

அவள  கைபுடுச்சவனோ 

ஆறு  காணிக்கு 

அரசனாம்  அவனுக்கு 

அரசாங்க   சம்பளமாம்... 


பாவம்  பதுமை 

அவளோ   ஆட்டி 

வைக்கும்  கை 

பொம்மையானாள் 


காரணமோ 

குடும்பத்தின் 

தலை மகளாம்...


                    என்றும் தமிழோடு

                           --விசித்திரக்கவி...

Comments

  1. குடும்பத்தின் தலைமகளுக்கு இதுதான் நிலமையா..?

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்