சில நேரம்....


(சில நேரம்....)
சின்னச் சின்ன
கண்ணீர் துளிகளை
நிம்மதியென நெஞ்சம்
கொஞ்சம் ஏங்குமே...

(சில நேரம்....)
சொல்ல வரும்
வார்த்தைகளை சொல்லாமல்
நாடு கடத்த
மவுனம் தோன்றுமே...

(சில நேரம்....)
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விஸ்வரூபம் எடுத்து
விதியை நொந்து
மனம் பாடுமே...

(சில நேரம்....)
மயக்கம் கொள்ளும்
மானிடர் மத்தியில்
மாயவித்தை காட்டுமே
மனசாட்சி அதிகமது குத்துமே...

(சில நேரம்....)
சில கவிதைகள்
பல நேரம்
காகிதங்களை கண்ணீரில்
கரைய வைக்குமே...

(சில நேரம்....)
எட்டிய பொருள்
கிட்டாமல் போனால்
நெஞ்சத்தை முட்டுமே
துக்கத்தை தூண்டுமே...

(சில நேரம்....)
தேடித்தேடி சேர்த்ததெல்லாம்
தேளாய் கொட்டுமே
தேன் கூட
தினம் கசக்குமே...

(சில நேரம்....)
நிழலும் நிம்மதியில்
நித்தம் வாழுமே
நிஜம் மட்டும்
சோதனையில் வாழுமே...


(சில நேரம்....)
சில நேரம்
பல நேரம்
நரகத்தில் நாடோடியாய்
நடக்க கற்றுத் தருமே...

(சில நேரம்....)
அந்நேரம்
எந்நேரமென
இந்நேரம்
சில உள்ளங்கள்
உள்ளூற பார்த்திருக்குமே...


                       _விசித்திரக்கவி 
  


Comments

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்