இராட்சஷி
சஹாராவுக்கும்
நயாகராவுக்கும்
நடுவே நிறுத்தி
நட்டநடு ராத்திரியில்
நகத்தினால்
நரம்பினை
வீணை போல் மீட்டுகிறாள்...
விண்ணை முட்டும்
முத்தச் சத்தத்தில்
மொத்தமும் கொள்ளையடித்து
கொலை செய்கிறாள்...
சஹாராவுக்குள்
நயாகரா நகர்ந்த
பின்னும் இன்னும்
சுகம் கூட்டுகிறாள்...
வற்றாத நயாகராவும்
நாணம் கொள்ளுமளவுக்கு
கொஞ்சுகிறாள்...
சஹாராவாக நான்
உரிய உரிய
செவ்விதழ்
செந்தேனை
சுரக்கிறாள்...
போதும் போதுமடி
ராச்சசி இடை
இடையே இடைக்கும்
சிறுது இடைவெளி தருவோம்...
இராவெல்லாம்
கனிந்து இனிந்து
இணைத்தே இருப்போம்...
--- விசித்திரக்கவி
Nice bro 👌👌👌☺️
ReplyDelete