தீயாய் தென்றல்
வாசகனும் வாசகியும்
தருகிற கருத்து எனும்
மூச்சில் தான்
இந்த படைப்புகள்
சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்...
தீயாய் தென்றல்
என்னவனே ...
தென்றல் வந்து
தீண்டி தீண்டி
தினம் தினம் -நானும்
தீயில் பாய்கிறேன்...
தேடித் தேடி
தேய்ந்து தொலைக்கிறேன்
தீவாய் நானும் -உன்
நினைவில் போகிறேன்...
சாரலோடு சண்டை போட்டு
புயலோடு புல்லாங்குழல் -கொண்டு
பொழுதெல்லாம் பூவே
உன்னோடு புலம்புகிறேன்...
புன்னகை யெல்லாம்
நீ பறிக்க-
நிழலாய் நானும்
சாய்ந்து சாகிறேன்...
காற்றோடு கரைந்து
தீயினை தீண்கிறேன்
நீரிலே நடந்து
நிலத்திலே நீந்துகிறேன்...
நான் இல்லாமல்
நீயாய் தவிக்கிறேன்...
கனவோடு காய்ந்து
நிஜத்தினிலே நனைகிறேன்...
காகிதத்தோடு கனைத்து
காலத்தோடு கை கோர்க்கிறேன்
கண்ணே உனை-காண
காதலோடு வருகிறேன்...
மன்னவனே ...
உன்னோடு உயிர்
கொண்டு உறவாட
உயிரே உறைவேன்
உணர்வாய் நானே...
என்றும் தமிழோடு
விசித்திரக்கவி

காகிதத்தோடு கனைத்து
ReplyDeleteகாலத்தோடு கை கோர்க்கிறேன்
கண்ணே உனை-காண
காதலோடு வருகிறேன்...
மனதை தொட்ட வரிகள்...
நன்றி சகோ ...
Delete