பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்...

 பிஞ்சு ரோஜாக்கள் பூக்கட்டும்... 





அரங்கமே  அமைதியில் 

அழுகையில்  பிஞ்சு  ரோஜாக்கள்... 


அவர்களை 

அப்படியே  விட்டு  விடுங்கள்...


உங்களின்  வன்புணர்வு 

விரல்களுக்கு  இடையில் 

சிக்கி க்  கொண்ட  மலராத 

மொட்டு  ரோஜாக்கள்  அவை... 


பாலை  வானத்தில் 

பூத்த  ரோஜாக்கள்... 


உங்களின்  பாழாய்  -போன 

பாலியல்  வன்கொடுமையில் 

பறிக்க   பட்ட 

பாவப்பட்ட  பூக்கள்... 


புத்தகமும் 

புதிய  கனவுகளும் 

புத்தியில்  சுமக்கும்  வயதில், 


மனதோடு  மக்காத 

அந்த  கொடூர 

நினைவுகளை   பரிசளித்த 

அறிவுள்ள  பைத்தியவாதிகளே... 


அப்படியே  விட்டு 

விடுங்கள்... 


உங்களின்  பசி 

தீர்க்க  அந்த 

பூக்களை  புசிக்காதீர்கள்... 


பூமியில்  பூக்காத 

இன்னும்  எத்தனையோ 

ரோஜாக்கள்,  நினைத்தாலே...


அவற்றின்  வண்ணத்திலேயே 

வருகிறது  கண்ணீர்... 


காம  பிசாசுகளே 

பிஞ்சுகளின்  நொஞ்சில் 

நஞ்சை  திணிக்காதீர்கள்... 


தினம்  தினம் 

ஆயிரம்  இம்சைகளோடு 

இனிமை  யாக்கப்பட்ட 

இனிய  அகிம்சை 

வாழ்கை  அது... 


வரமே  சாபமான 

வாழ்வு  அது...

வாழும்  முன் 

வாய்க்கு  அரிசி 

வாரி  வராதீர்கள்... 


பட்டாம்  பூச்சிகளை 

பறக்க  விடுங்கள்... 


பற்றி  பற்ற 

வைக்காதீர்கள்... 


அப்படியே  பறக்கட்டும்... 


நீண்ட  வானில் 

ஒரு  துளி 

புள்ளியில்  மட்டுமே 

பறந்து  போகும் 

பக்குவம்   கொண்டவை... 


அப்படியே  விட்டு 

விடுங்கள்... 


உனை  ஆக்கிய 

அணுவின்   ஆக்கத்திற்கு 

ஆதாரம்  அவள்... 


அப்படியே  விட்டு 

விடுங்கள்... 


கொடூர  பார்வையில் 

கொடிய  தீயினை 

கொட்டி  தீர்க்காதீர்கள் 

தீண்டும்  இடமெல்லாம் 

தீக்   குளிக்க  தோணுகிறது... 


அப்படியே  விட்டு   விடுங்கள்... 


என்று... 

மலரும்  முன்னே 

மாலை  சுட்ட  பட்ட 

மலரின்  மரண 

அழுகை...


                    என்றும் தமிழோடு 

                                விசித்திரக்கவி 

Comments

  1. ஆழமான வரிகள் ..அனைவரும் யோசிக்க வேண்டிய கருத்து.. எல்லோருக்கும் கொண்டு சேருங்கள் ..💯

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசிரியரே ...
      உங்கள் ஆதரவு தேவை ...

      Delete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்