இன்றும் பச்சை மண்ணோ ...

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து எனும் மூச்சில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ... உங்கள் கருத்துகள் மூலம் உயிர் கொடுங்கள்...


இன்றும்  பச்சை  மண்ணோ ...

பச்சையாக  சொல்கிறேன்... 

இருண்ட  வானில் 
இருள்  பச்சையாகவே  இருந்தது... 

கண்ட  பச்சை 
கனவுகள்  கண்விழித்தும் 
கண்களுக்கு  இடையே 
பச்சையாகவே  பளிச்சிட்டது... 

அந்த  இரவின் 
பச்சை  தூக்கத்தில் 
பச்சையான  பச்சை 
கனவு  என்ன?... 
 
பக்கம்  வாருங்கள்... 

பச்சையை  பச்சையாக 
பச்சை  போலே 
பச்சையாக  பச்சை 
பாமர  உழவன் 
உற்பத்தி  செய்கிறான்... 

கண்களுக்கு 
பச்சையாகவே  தெரிந்தது...
அது  பச்சைமண் 
அல்ல  என்று... 

வானத்தின்  வாக்குக்கு 
வாய்ப்பளித்து  வாய்பிளந்து 
வானத்தை  வற்றாத 
பச்சை  கனவோடு 
கண்களில்  ஈரம் 
சொட்ட  கனவு  காண்கிறான்... 

அந்நேரம் 
வெள்ளை  நிற 
வெண்ணிலா  வந்து 
கருத்த  அப்பாவிடம் 
காலை  உணவு 
நேற்றோடு  போனது 
மதிய  உணவு 
ஒரு  குவளை  நீரோடு 
பனைமரத்தடியில்  கழிந்தது 
நாளையேனும்  எனக்கு 
பிடித்த  இரவு  உணவு 
இலையிலே  வருமா...
என்று 
பச்சை  பிள்ளை  போல் 
பச்சையாக  கேட்டாள்... 

பாவம்  என்ன  செய்வான்... 

பதறி  போன 
பச்சை  முத்து 
பச்சையாக 
வெள்ளை  நிற 
கண்ணீர்  துளிகளை 
சிந்துகிறான்...


                                                      என்றும் தமிழோடு 
                                                                விசித்திரக்கவி

Comments

  1. Replies
    1. நிச்சயம் அடுத்த முறை கொஞ்சம் வேக வைத்து விடுகிறேன்
      பொறுத்து கொள்ளுங்கள் கவியே ...

      Delete
  2. வண்ணங்களை வைத்து விசித்திரமாக விசித்திர கவி விளையாடுகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பிற்கு நன்றிகள் பல ...

      Delete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்