விசித்திர வரிகளின் சொந்தக்காரி

 


விசித்திர வரிகளுக்கு

இவள் சொந்தக்காரி

எனையாளும் மாயங்கள்

தெரிந்த மந்திரக்காரி...


காலமெல்லாம் என்

காற்றுப் பைக்குள்

கடிகார முள்ளாய்

சுற்றும் தந்திரக்காரி...


மூக்கு வியர்க்கும்

முன் கோபக்காரி

மூச்சென துடிக்கும்

முல்லைபூ வாசக்காரி 


நிழலென வருவாள்

நிம்மதி தருவாள்

நித்தம் அணைப்பாள்

அனைத்தும் ஆவாள்...


ஆக்கத்தின் ஆதாரமாய் -என் 

ஏக்கத்தின் அச்சாரமாய்

என்னுள் வாழ்கிறாள்...



                 ✍விசித்திரக்கவி 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்