வரிகளாய் வாழ்வேனா...

 


தேனென இன்னிக்கும்

தேவியின் கன்னங்கள்

தெவிட்டாத இன்பத்தின்

இதயச் சின்னங்கள்...!


அல்லி இதழின்

அதிசயப் பிளவில்

முல்லை சிரிப்பென 

முரசாய் சாட்டுகிறாள்...!


நெஞ்சோரம் வேதனை கூட்டுகிறாள்-என் 

விழியோரம் விளம்பரம் காட்டுகிறாள்...!

விண்ணோடு வில்கொண்டு

என்னோடு சமர் செய்கிறாள்...!


மையுண்ட மலர்விழியால் 

மண்ணோடு சாய்க்கிறாள்

மடியோடு அணைத்து

மனதிலே மத்தளம் கொட்டுகிறாள்...!


காற்றிலே அசையும் நாணல்

இடைகாட்டி நாணத்தால் நெளிகிறாள்

கருநிற குழல் போர்த்தி

மோகத் தீயாய் சுடுகிறாள்...!


சகியின் சபரக்

கண்களால் கற்பனைச்

சாகரத்தில் ஆழ்த்திப் போகிறாள்...!


பேதை நானும் , 

காகிதம் கொண்டு

கொஞ்சம் நீந்திடுவேனா...!

வரிகளாய் கொஞ்சம் வாழ்ந்திடுவேனா...!


               ✍விசித்திரக்கவி 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்