சொன்னது அவள் தான்...

 




முற்பொழுதும் உன் கற்பனையிலே

முழுமதியாய் வாழ்கிறேன்...

மூச்சுக்கு மூச்சாய் உன்

நினைவுகளையே சுவாசிக்கிறேன்...


நித்தம் தேடுகிறேன்

நிம்மதியிழந்து வாடுகிறேன்...

மாங்குயில் நான் மாமர

கிளையோரம் மயங்குகிறேன்...


உயிரோடு உருவமிழந்து

உன்னைத்தான் தேடுகிறேன்...

அருவமாய் உன்னருகில் 

உணர்வாய் உறைகிறேன்...


அறியாமல் போகாதே

அடியோடுயெனை சாய்க்காதே...

அந்தி நேரத்தில் -நீயும் 

அகிம்சையினை கூட்டாதே...


ஆகாயத்தில் அலைகிறேன்

கள்வனே உனை அழைக்கிறேன்...

கண்கட்டி வித்தை போதுமடா 

கண்ணெதிரே வாழ்ந்திட,

என் வாசல் தேடி வந்திடு...


                     ✍விசித்திரக்கவி 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்