அல்லி கண்களால் கிள்ளி பார்க்கிறாள்...




ஆனந்தம் ஆனந்தம்
அதிகாலையிலே பேரானந்தம்...
கொஞ்சம் துள்ளப்பாக்குது
நெஞ்சத்தை மெல்லப்பாக்குது...

மெல்லமாய் வந்து போகுது
செல்லமாய் எனை பாக்குது,
அந்தி வானமாய்-அது
அழகுதனை கூட்டுது...

அதிசய நிலவாய்
ஆலோலாம் பாடுது...
அட! எத்தனையோ இரவுகளில்
இந்த இரவு
இத்தனை சுகமா...

ஓவியப் பெண்ணாய்
ஒய்யாரமாய் வருகிறாள்,
சிங்கார மில்லாமல்
சில்லென பார்க்கிறாள்...

சின்னவள் செவ்வந்தி நிறத்தில்
செவ்வாழைத் தண்டென
அல்லி கண்களால்
கிள்ளி பார்க்கிறாள்...

காஞ்சி பட்டெடுத்து
கண்ணுக்கு மையிட்டு
வளவிக்கு செய்தி சொல்லி
வானத்து நிலவென
வைபோகம் வருகிறாள்...

அத்தனை அழகும்
இத்தனை நாள் காணாலையே,
எத்தனை நாள் -இனி
நான் இப்படியே...

அம்மாடியோய்...!
மஞ்ச தாலி
தஞ்சம் கண்டாச்சி
அம்மியும் அருந்ததியும்
ஆசைதீர பார்த்தாச்சி...

கன்னி மொட்டு
எனை முட்டும் நேரமிது
நான் மட்டும்
பறக்கும் நேரமது...!

கிட்டபோய் தொட்டு
பார்க்கும் நேரமது
சட்டென முழித்தேன்
அத்தனையும் கனவிது...!

              -விசித்திரக்கவி 


Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்