உழைத்து உழைத்தே உருகுலைந்து போகிறோம்...
உழைத்து உழைத்தே
உருகுலைந்து போகிறோம்
ஒருபிடி சோத்துக்கே
ஓயாமல் சுமக்கிறோம்...
அன்று முதல்
இன்று வரை
உழைத்தவனே ஓடாய்
உடைந்து போகிறோம்...
முதலாளி தத்துவம்
முதலைபோல் ஆகுது...
வரிகள் ஏறுது-அது
வாய்க்கால் வரை போகுது ...
உழவனே உழவுக்கு
பயந்து ஓடுகிறன்
நடப்பதையெண்ணி நாளும்
வேதனையிலே வாழ்கிறான்...
அரசு சட்டமெல்லாம்
தரிசாய் போகுது
உழைத்தவன் குடும்பத்தில்
தாலி மட்டுமே எஞ்சுது...
✍விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...