சந்தேகம் வேண்டாமடி...



கண்கள் ரெண்டும்
கருப்பு வெள்ளை ஓவியமா...?
காதல்மொழி பேசும்-என்
கற்பனைக் காவியமா...!

எண்ணத்திரையில் தோன்றும்
வண்ணத்திரை பாவையம்மா,
நீ பல்லவ
நாட்டின் பதுமையம்மா...!

தேன்துளி கொண்டு
தேவதை நீயென வரைந்தானா...!
தித்திக்கும் தமிழ் கொண்டு
செவ்விதழ் படைத்தானா...!

செந்நிறப்பூ கண்டு
செவ்வாழை தண்டென,
செந்தமிழ் நாட்டு பெண்ணுக்கு
உரு கொடுத்தானா...!

பூங்காற்றை பூவென பறித்து
நிலவென உருக்கி,
உயிர் கொடுத்தானா...!
பூச்சரமாய் தொட்டுத்தானா...!

தேவதைகளின் நகலென
நகம் வைத்தானோ...!
தேகம் எல்லாம்
சந்தனத்தால் இளைத்தானோ...!

இளையவளே கண்ட
நாள்முதல் கனவுகளில்,
தொட்டுத்தொட்டு பார்க்கிறேன்...!
தூக்கத்தினை தொலைக்கிறேன்...!

சந்தேகம் வேண்டாமடி
சந்திரனும் சொல்வாண்டி...!
சாட்சியென கொள்ளடி
சம்மதமென கொஞ்சம் சொல்லடி...!

                   ✍விசித்திரக்கவி

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்