காதல் வந்த பின்னே...



காதல் வந்து
தொட்டப் பின்னே
நெஞ்சம் தாங்குமா
கொஞ்சம் தூங்குமா...!

இரவு வந்த பின்னே
நிலவு நீங்குமா
நீரில்லாமல் மீன்
நித்தம் நீந்துமா...!

காதல் காற்றுப்பட்டு
கவிதைப் பூக்குதே
உன் வாடைத் 
தொட்டுத் தூக்குதே...!

அழகுப் பார்த்து
ஆசைத் தாக்குதே
அது ஆழம்
பார்த்துத் தள்ளுதே...!

ஆசை முத்தம்
அஞ்சாறு கேக்குதே
அச்சம் வந்து
மிரட்டிப் போகுதே...!

இந்த இரவெல்லாம்
வேர்த்துப் போகுதே
என் கனவெல்லாம்
நீர்த்துப் போகுதே...!


               ✍விசித்திரக்கவி

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்