மனிதனாய் பிறந்து விட்டேன்...


கண்களை தொலைத்து விட்டேன்,
இமைகளை திறந்து 
உறக்கத்தினை கனவுகளில்
கொஞ்சம் தேடுகிறேன்...

உரக்கச் சொல்கிறேன்,
உருமாறி உருகுழைத்து
வேதனையிலே வாழ்கிறேன்
புழுவாய் நெளிகிறேன்...

நெஞ்சமெல்லாம் வேகுது
பஞ்சாயது எரியுது
பழிகளை சுமந்து
பக்குவமாயது பார்க்குது...

பாலென கண்டதெல்லாமெனை
பாதாளத்தில் தள்ளுது
பூவென கண்டதெல்லாம்
பூநாகமாய் சீருது...

மனிதனாய் பிறந்து விட்டேன்.
மன்னித்தே கொஞ்சம்
மானமிழந்து விட்டேன்-இதையே
மறுபடியும் சகிப்பேனா...

கல்லெரிந்த கண்ணாடிப் போல
சொல்லெரிந்து சிதறி கிடக்கிறேன்
சிக்கித் தவிக்கிறேன்
சிந்தனைகளை இழக்கிறேன்...

வாழவே நினைக்கிறேன்
வார்த்தைகளில் இறக்கிறேன்
வெறுமையாய் உணர்கிறேன்
வெற்றிடமாய் கிடக்கிறேன்...

                 ✍விசித்திரக்கவி 














Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்