சிந்தை தெளிந்தேன்...




கலையான உனை 
சிலையெனக் கண்டேன்...!
சிலநேரம் கண்களும் 
கவிபாடக் கண்டேன்...!

காற்றில் நிழல்
அசையக் கண்டேன்...!
அப்போதுதான் நான்
கொஞ்சமுயிர் கொண்டேன்...!

அசைந்தது நிழலா 
ஐந்தடி சிலையா...!
அதிசயம் கண்டேன்
ஆகாயத்தில் பறந்தேன்...!

இதயம் இழந்தேன்
காட்சிகளில் விழுந்தேன்...!
கற்பனையில் தவழ்ந்தேன்
காற்றினில் கலந்தேன்...!

எண்ணம் தொலைத்தேன்
உன்னில் திழைத்தேன்,
எழுத்தினை கூட்டி
காகிதத்தில் கழித்தேன்...!

அத்தனையும் பிழையென
ஆத்திரத்தில் கிழித்தேன்...!
இரத்தம் பிழிந்து,
சித்திரமென சிந்தை தெளிந்தேன்...

             ✍️விசித்திரக்கவி 

Comments

  1. இந்த தேன் இனித்தது

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்