என் அதிகாலைப் பொழுது...
அதிகாலைப் பொழுதெல்லாம்
அவள் முகம்
பார்த்தே, அழகாய்
என்னுள் விடிகிறது...
வெண் நிலவு
மறைந்த பின்னே
பெண் நிலவு
இன்னும் மயங்குது...
மயக்கும் கண்கள்
மயங்கிக் கிடக்குது
மத்தாப்பாய் உதடுகள்
அதிகம் சிரிக்குது...
எதையோ சொல்லுது
ஏக்கங்களை கூட்டுது
ஆசையாய் கிள்ள
கன்னங்கள் பூக்குது...
வானவில் ரெண்டும்
வாடி கிடக்குது
அதை கருமேகம்
சூழ்ந்து கிடக்குது...
இராத்திரி நேரத்து
இரகசியங்கள் கொஞ்சம்
செல்லமாய் எட்டிப்பார்க்குது
மீண்டும் இதயத்தை
மெல்லமாய் தட்டிப்பார்க்குது...
அன்னம் அசையாமல்
அசந்து அழகு மயிலென
அடி நெஞ்சில்
மத்தளம் கொட்டுது...
✍விசித்திரக்கவி

Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...