காவியமும் ஓவியமும்
காவியமும் ஓவியமும்
குழைத்து குழைத்து செய்தானோ
சொல்லும் பொருளுமென
செந்தமிழிலே உனை படைத்தானோ...
கண்கள் ரெண்டும்
இரட்டைக் காப்பியமா...?
கடைவிழியினிலே மடையென
வழிந்து இளமையினை வாட்டுதே...
புன்னகையாலே பூக்கிறாய்
பூ லோகம்தான் தங்கிட்டுமா...!
இவள் பதுமையென
புலோகம் தான் ஏற்றிட்டுமா...?
தாரகையேயுன் இதழ் கனியிலே இரட்டை வரிகளா...!
ஆழ்ந்தது பார்த்தால்
இன்பத்தின் சுவைகளா...
விழிகளுக்குள்ளே வண்டாடுதோ
எதை கண்டு திண்டாடுதோ...!
கண் மணிக்குள்ளே
காப்பியங்கள் பல நின்றாடுதோ...!
தென்னாட்டு நிலவே...!
தங்க நிழலென உன்னில்
தங்கிக் கொள்ள
தஞ்சமென புகுந்தேன்...
தாங்கி கொள்ளடி கொஞ்சம்
ஏந்திக் கொள்ளடி,
தவழ்ந்திட்டுவேன், வீழ்ந்திடுவேன் மீண்டும் உன்னிலே ஆழ்ந்திடுவேன்...
-விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...