யுத்தம் செய்கிறாள்
நான் கொஞ்சம்
கொஞ்சி மிஞ்சினால்...
சத்தங்கள் இன்றி
முத்தங்களால் என்னுடன்
யுத்தம் செய்கிறாள்...
முழுமதி நிலவாய்
முற்கொண்ட ரோஜாவாய்
ஆகாயம் போல்
விடிய விடிய
மேனிதனில் உலாவுகிறாள்...
விழா கால
விடியல் போல்
விடிய விடிய
விழாவை காட்டி
தேவதை அவளோ
திருவிழா ஆகிறாள்...
திருவிழாவை ரசிக்க
வந்த என்னை
வசீகர பார்வையால்
திருட தூண்டுகிறாள்...
இவள் கவிதையின்
மகளா இல்லை
ரவி வர்மனின்
ரகசிய ஓவியமா...
ராந்தால் ஒளியில்
ரகசியங்களை கலைத்து
ராட்சசி அவள்
ரசனையோடு ரசிக்கிறாள்...
விண்மீனையும் மிஞ்சும்
பெண் தாரகையின்
கண்களோ இங்கு மின்மினிகள்...
கதையாய் கதை
கேட்டும் பூங்கற்றே
தீண்டும் தென்றலெல்லாம் -என்
ரதியின் கட்டுப்பாடே...
விரல்களால் புதியதொரு
தளம் போட்டு
அகிம்சையாக இம்சிக்கிக்கிறாள்
என் இம்சை ராணி...
🌹விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...