நீலவானிலே நீயும்,நிலவிலே குடிப்புகுந்தாயா...?

உன் நினைவுகளெல்லாம்
கனவுகளாக உருவெடுத்து
நித்திரை நேரத்திலெனை
நித்தமும் வாட்டுதடி...

கண்ணாடி பிம்பமாய்
கண்ணெதிரே கலையுதடி...
கானல் நீராயது,
கண்ணுக்குள் பாயுதடி...

கண்ணீரும் செந்நீராய்
கன்னத்தில் வழியுதடி...
நெஞ்சம் வலியிலே,
கொஞ்சம் கதறுதடி...

காதல் மொழி
பேசும் முன்னே,
என்னுள் கவிதை-மொழி 
கொஞ்சம் பேசினாய்...

காதல் மொழி
பேசிய பின்னே,
மௌன மொழி -ஏனடி..?
கொஞ்சம் சொல்லடி...

நெஞ்சில் நிலைத்தவளே,
நித்தமெனை விழியாலே
நெஞ்சோடு சாய்த்தவளே -நீயும்
நித்திரை கொண்டாயா...?

நீலவானிலே நீயும்,
நிலவிலே குடிப்புகுந்தாயா...?
காற்றாய் மாறி காதோடு
மெல்லமாய் பேசடி...!

காலங்கள் பல
கடந்தே காத்திருக்கிறேன்...
கண்ணோடு உன் நினைவுகளை
மட்டுமே சேர்த்திருக்கிறேன்...

என் வீட்டு -ராணியே
எனக்கு முன்னே,
எனைவிட்டு போனதென்ன...?


உனக்கு மட்டும்
சொர்க்க மென்ன...?

ஏனடி போனாய்...?
எங்கே போனாய்...?

இங்கே,
தவிக்கிறேன் நானடி
கொஞ்சம் பாரடி...!


           ✍️விசித்திரக்கவி 


            

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்