தொலைதூர வானம்

 



தொலைதூர வானம்

தொலைவாக நீயும்,

தொலையாத நானும்

நெடுந்தூர பயணம்...


நட்டநடு ராத்திரியில்

நந்தவன தோட்டத்தில்,

எத்தனையோ இன்பங்கள் -இன்று

அத்தனையும் துன்பங்கள்...


எட்டாத வானவில்லுக்கு

ஏழு நிறமெதற்க்கு...?

வந்து போகும்

உன் நினைவிற்க்கு

வாசற்படி எதற்கு...?


வாடும் மலரக்கு

வாசம் எதற்கு...?

தேயும் நிலவிற்க்கு

வளர்பிறை தான் எதற்கு...?


ஓடும் நதிக்கு

ஓய்விருக்கா...!

ஓடாத கடலுக்கு

நிலையென நீர்யிருக்கா...!


உனக்கென நானிருக்க,

எனக்கென யாருயிருக்கா...?


வந்து நீயும்

போன பின்னே

என் நியாபகமிருக்கா...!


அலையென மோதும்

உன்னினைவின் மீதெனக்கு

கொஞ்சம் கிறுக்கா...!

என் மீதும்

உனக்கும் வெறுப்பா...!


             -விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்