நெஞ்சோரம் கொஞ்சம் கலவரம் கூட்டடி...!



சித்திரங்கள் பார்க்குதடி
சிலையெல்லாம் வேர்க்குதடி...!
சிணுங்கி சிணுங்கி
நீ சிரித்தால்,
சித்திரங்கள் பாவமடி...

பட்டு உடையில்
சிட்டென நீ வந்தால்,
சட்டென உடையும்
என் இதயமடி...!

சந்தனமும் குங்குமமும்
சங்கீதம் பாடுதடி...!
சித்திரை நிலவாய்
தேகம் மின்னுதடி...!

வளையளும் கொலுசும்
என்னடி பேசுது...?
உனை கண்டால்-என் 
கண்களுமிங்கே கூசுது...!

மல்லிகை பூவும்
மனசுக்குள்ளே பாடுதோ...!
மானே நீ
தொட்டதால்,சிலிர்த்ததோ...!

தோகை மயிலாய்
ஆடுகிறேன்,பாடுகிறேன்...!
பாவை நீயும் பார்த்திடடி 
நெஞ்சோரம் கொஞ்சம்
கலவரம் கூட்டடி...!

            ✍விசித்திரக்கவி 

Comments

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்