கற்பனை களவு போனது
என்றும் தமிழோடு
-விசித்திரக்கவி
கற்பனைகள் களவு போனது
எழுதாக்கவிதைகள் ஏக்கம் கொள்ளுது,
உவமைகளை தொலைத்து விட்டேன்
ஊமையென கொஞ்சம் ஆகிவிட்டேன்…
நெஞ்சம் இங்கே தூங்குது
தஞ்சமென எங்கோ போகுது,
நித்தம் பஞ்சமென பார்க்குது
நித்திரையில் சித்திரையாய் வேகுது…
சித்தமெல்லாம் சிதைந்து போகுது
சிந்தனையிலே சிவந்து போகுது,
புருவங்கள் ரெண்டும் புலம்பி
புழுதிக்காற்றில் புழுவென துடிக்குது…
காற்றுக்கும் கைகள் இல்லை
கனவுகளுக்கும் எல்லை இல்லை,
கதைப்பார் யாரும் இல்லை
கதவடைப்பார் யார் இங்கோ…?
வார்த்தைகள் வற்றிப் போய்
முதுகோடொற்றிய வயிற்றைப் பார்த்து
வாயடைத்து தூற்றி போகுது-இனி
மிச்சமென யெதுமீறப் போகுது…
ஆண்டவன் பிழையா…?
ஆள்கிறவன் பிழையா…?
ஆறறிவுதான் அகிலத்தின் பிழையா…?-இது
அறிந்தவனின் பிழையோ…
இதை யானும் அறியலையே…
ஆள்பவன் பிழையன்றி எவன் பிழை...
ReplyDeleteஒரு வேலை இருக்கலாம்
ReplyDelete