மாயங்கள் சொல்லும் மர்மங்கள்




காலம் நேரம் பார்த்தே
காதல் மழை பொழிந்திடுமா...?
அலைகடல் மோதி
கரையென்ன கரைந்திடுமா...!

காற்றடித்து நிழல் பறந்திடுமா...!
கருமேகம் அணைத்து
நிலவென்ன மயங்கிடுமா...?
கொஞ்சம் மறைந்திடுமா...!

கனவு சொல்லி
நினைவு வந்ததா...?
நினைவு சொல்லி - உன்
கனவு வந்ததா...!

பூவைக் கேட்டு
வண்டு வந்ததா...!
வண்டைக் கேட்டு - இல்லை
பூப் பூத்ததா..?

மின்னல் அடித்த பின்னே
இடி இடிப்பது,
நியாயம் தானே-இது
இயல்பு தானே...

உடல்பட்ட துன்பம்
மனது அறியுமே..!
மனதுபட்ட துன்பம்
கண்கள் மட்டும் சொல்லுமே...!

களவு போன
இதயம் கேட்குமா...?
இதயம் சொல்லி
மூளையென்ன கட்டிப்போடுமா...?

அன்பு வந்த பின்னே,
ஆசை வருவது குற்றமா.....?

             ✍விசித்திரக்கவி 

Comments

  1. கவிதை அருமை மிகவும் இரசித்தேன்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. 😊😊😊நன்றிகள் நண்பா
    அடுத்தடுத்த பதிவில் இன்னும் சுவை கூட்ட முயல்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...

Popular posts from this blog

கடைசி கண்ணீர் துளி...

ஐயனே...

விசித்திரக்கவியின் அறிமுகம்