மாயங்கள் சொல்லும் மர்மங்கள்
காலம் நேரம் பார்த்தே
காதல் மழை பொழிந்திடுமா...?
அலைகடல் மோதி
கரையென்ன கரைந்திடுமா...!
காற்றடித்து நிழல் பறந்திடுமா...!
கருமேகம் அணைத்து
நிலவென்ன மயங்கிடுமா...?
கொஞ்சம் மறைந்திடுமா...!
கனவு சொல்லி
நினைவு வந்ததா...?
நினைவு சொல்லி - உன்
கனவு வந்ததா...!
பூவைக் கேட்டு
வண்டு வந்ததா...!
வண்டைக் கேட்டு - இல்லை
பூப் பூத்ததா..?
மின்னல் அடித்த பின்னே
இடி இடிப்பது,
நியாயம் தானே-இது
இயல்பு தானே...
உடல்பட்ட துன்பம்
மனது அறியுமே..!
மனதுபட்ட துன்பம்
கண்கள் மட்டும் சொல்லுமே...!
களவு போன
இதயம் கேட்குமா...?
இதயம் சொல்லி
மூளையென்ன கட்டிப்போடுமா...?
அன்பு வந்த பின்னே,
ஆசை வருவது குற்றமா.....?
✍விசித்திரக்கவி

கவிதை அருமை மிகவும் இரசித்தேன்.
ReplyDelete- கில்லர்ஜி
😊😊😊நன்றிகள் நண்பா
ReplyDeleteஅடுத்தடுத்த பதிவில் இன்னும் சுவை கூட்ட முயல்கிறேன்...